Tuesday, 28 March 2017

தமிழ் அறிஞா்கள்

                   கவிக்கோ அப்தூல்ரஹ்மான்


·         பிறப்பு – 02.11.1937 , ஊர் – மதுரை .
·         ‘தொன்மம்’ என்ற இலக்கிய உத்தியை மிகுதியாக பயன்படுத்தியவர் .
·         வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றியவர் .
·         ‘கவிக்கோ’ எனும் இதழை நடத்தினார் .

பரிசும் பாராட்டும்

·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார் .
·         தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்
·         கவிக்கோ’ என்னும் பட்டம் பெற்றார் ,

·         "மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் ; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டார்"

சிறந்த நூல்கள்

·         பால்வீதி , நேயர் விருப்பம் , சுட்டுவிரல் , பித்தன் , சொந்த சிறைகள் , கரைகளே நதியாவதில்லை , விலங்குகள் இல்லாத பகுதி , விதை போல விழுந்தவன் , முத்தமிழின் முகவரி , அவளுக்கு நிலா என்று பெயர் .
·         ஆலாபணை – சாகித்திய அகாதமி வென்ற நூல்.

சிறந்த தொடர்கள்

·         புறத்திணை சுயம்வரம் மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி
·         உன் தராசுத்தட்டுகளை கொஞ்சம் கண்திறந்து பார்

இங்கே புறாவின் மாமிசத்தை ஜீவிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                மு.மேத்தா


·         பிறப்பு – 05.09.1945 , ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்
·         இயற்பெயர் – முகமது மேத்தா .
·         வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
·         சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
·         தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
·         இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
·         சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
·         தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதினை பெற்றுள்ளார் .

மேற்கோள்கள்

·         இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
·         மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை

சிறந்த நூல்கள்

·         கண்ணீர் பூக்கள்ள , ஊர்வலம் , சோழநிலா , மனச்சிறகு , வெளிச்சம் வெளியே இல்லை . ஒருவானம் இரு சிறகு , காத்திருந்த காற்று , திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் , நந்தவன நாற்காலி .

·         ஆகாயத்தில் அடுத்தவீடு – சாகித்திய அகாதமி வென்ற நூல்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சிற்பி பாலசுப்ரமணியம்

·         பிறப்பு 29.07.1936 , ஊர் – ஆத்துப்பொள்ளாச்சி
·         பெற்றோர் – பொன்னுசாமி , கண்டியம்மாள் .
·         பொள்ளாச்சி நல்லமுத்து மஹாலிங்கம்ம கல்லூரியில்  விரிவுரையாளராக பணியாற்றினார் .
·         கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்தார் .
·         இவரது கவிதைகள் ஆங்கிலம் , கன்னடம் , மலையாளம் , மராத்தி , இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது .
·         சாகித்திய அகாதமி,  ஞானபீட தொகுப்புகளில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது .

விருதுகள்

·         இவர் எழுதிய ‘மௌன மயக்கங்கள்’ ,’பூஜ்ஜியங்களின் சங்கிலி’ எனும் கவிதை நூல்கள் , தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றுள்ளது .
·         லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை , அக்னிசாட்சி எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் . இந்நூல் , 2000 ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினை பெற்றது .
·         இவர் இயற்றிய ‘ஒரு கிராமத்து நதிக்கரையில்’ எனும் நூலுக்கு , 2002-ல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
·         தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமை , சிற்பிக்கு மட்டுமே உண்டு .
·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
·         தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் , ஆங்கில இலக்கியநூல் பரிசு பெற்றுள்ளார் .
·         ‘கவிஞர்கோ’ எனும் பட்டம் , குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது.

சிறந்தநூல்கள்


·         சிரித்த முத்துகள் , நிலவுப்பூ , ஒளிபறவை , சர்ப்பயாகம் , சூரியநிழல் , ஆதிரை , அலையும் சுவடும் , புன்னகை பூக்கும் பூனைகள் , நீலக்குருதி 









No comments:

Post a Comment

குப்தர்  காலத்து  வரலாற்றுச் சான்றுகள் குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன. 1. இலக்கியச் சான்று...