Monday, 27 March 2017

ஆச்சார்ய கிருபளானி/சுசேதா கிருபளானி

ஆச்சார்ய கிருபளானி

ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி
பிறப்புநவம்பர் 111888
ஐதராபாத்மும்பை மாகாணம்
இறப்புமார்ச்சு 19, 1982 (அகவை 93)
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து
வாழ்க்கைத் துணைசுசேதா கிருபளானி
ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி (11.11.1888 – 19.03.1982) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி. இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர்பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார். [1]
1970களின் நெருக்கடி நிலைக்குப் பின்னர் இவரது அரசியல் பங்களிப்பு குறைந்து போனது.


சுசேதா கிருபளானி

சுசேதா கிருபளானி
சுசேதா கிருபளானி
உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்
பதவியில்
02.10.1963–14.03.1967
முன்னவர்சந்திர பானு குப்தா
பின்வந்தவர்சந்திர பானு குப்தா
தனிநபர் தகவல்
பிறப்பு25 சூன் 1908
அம்பாலாஅரியானா
இறப்பு1 திசம்பர் 1974
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
சுசேதா கிருபளானி (Sucheta Kriplani) (வங்காளসুচেতা কৃপলানীஇந்திसुचेता कृपलानी) இந்தியா உத்தரப்பிரதேச மாநில முதல் பெண் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமை உடையவர்.
ஹரியானாவில் இருந்த வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் சுசேதா. இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவார்.
காந்தியடிகளின் வழியைப் பின்பற்றிய சுசேதா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இந்தியப் பிரிவினைக் கலவரத்தின் போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரையில் சுசேதாவும் கலந்து கொண்டார்.
1947 ஆகஸ்டு 15 அன்று அரசியலமைப்பு அவையின் அமர்வில் வந்தே மாதரம் பாடலை இவர் பாடினார்.

No comments:

Post a Comment

குப்தர்  காலத்து  வரலாற்றுச் சான்றுகள் குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன. 1. இலக்கியச் சான்று...