Tuesday, 28 March 2017

தமிழ் அறிஞா்கள்

                   கவிக்கோ அப்தூல்ரஹ்மான்


·         பிறப்பு – 02.11.1937 , ஊர் – மதுரை .
·         ‘தொன்மம்’ என்ற இலக்கிய உத்தியை மிகுதியாக பயன்படுத்தியவர் .
·         வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றியவர் .
·         ‘கவிக்கோ’ எனும் இதழை நடத்தினார் .

பரிசும் பாராட்டும்

·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார் .
·         தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்
·         கவிக்கோ’ என்னும் பட்டம் பெற்றார் ,

·         "மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் ; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டார்"

சிறந்த நூல்கள்

·         பால்வீதி , நேயர் விருப்பம் , சுட்டுவிரல் , பித்தன் , சொந்த சிறைகள் , கரைகளே நதியாவதில்லை , விலங்குகள் இல்லாத பகுதி , விதை போல விழுந்தவன் , முத்தமிழின் முகவரி , அவளுக்கு நிலா என்று பெயர் .
·         ஆலாபணை – சாகித்திய அகாதமி வென்ற நூல்.

சிறந்த தொடர்கள்

·         புறத்திணை சுயம்வரம் மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி
·         உன் தராசுத்தட்டுகளை கொஞ்சம் கண்திறந்து பார்

இங்கே புறாவின் மாமிசத்தை ஜீவிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                மு.மேத்தா


·         பிறப்பு – 05.09.1945 , ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்
·         இயற்பெயர் – முகமது மேத்தா .
·         வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
·         சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
·         தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
·         இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
·         சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
·         தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதினை பெற்றுள்ளார் .

மேற்கோள்கள்

·         இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
·         மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை

சிறந்த நூல்கள்

·         கண்ணீர் பூக்கள்ள , ஊர்வலம் , சோழநிலா , மனச்சிறகு , வெளிச்சம் வெளியே இல்லை . ஒருவானம் இரு சிறகு , காத்திருந்த காற்று , திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் , நந்தவன நாற்காலி .

·         ஆகாயத்தில் அடுத்தவீடு – சாகித்திய அகாதமி வென்ற நூல்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சிற்பி பாலசுப்ரமணியம்

·         பிறப்பு 29.07.1936 , ஊர் – ஆத்துப்பொள்ளாச்சி
·         பெற்றோர் – பொன்னுசாமி , கண்டியம்மாள் .
·         பொள்ளாச்சி நல்லமுத்து மஹாலிங்கம்ம கல்லூரியில்  விரிவுரையாளராக பணியாற்றினார் .
·         கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்தார் .
·         இவரது கவிதைகள் ஆங்கிலம் , கன்னடம் , மலையாளம் , மராத்தி , இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது .
·         சாகித்திய அகாதமி,  ஞானபீட தொகுப்புகளில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது .

விருதுகள்

·         இவர் எழுதிய ‘மௌன மயக்கங்கள்’ ,’பூஜ்ஜியங்களின் சங்கிலி’ எனும் கவிதை நூல்கள் , தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றுள்ளது .
·         லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை , அக்னிசாட்சி எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் . இந்நூல் , 2000 ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினை பெற்றது .
·         இவர் இயற்றிய ‘ஒரு கிராமத்து நதிக்கரையில்’ எனும் நூலுக்கு , 2002-ல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
·         தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமை , சிற்பிக்கு மட்டுமே உண்டு .
·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
·         தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் , ஆங்கில இலக்கியநூல் பரிசு பெற்றுள்ளார் .
·         ‘கவிஞர்கோ’ எனும் பட்டம் , குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது.

சிறந்தநூல்கள்


·         சிரித்த முத்துகள் , நிலவுப்பூ , ஒளிபறவை , சர்ப்பயாகம் , சூரியநிழல் , ஆதிரை , அலையும் சுவடும் , புன்னகை பூக்கும் பூனைகள் , நீலக்குருதி 









Monday, 27 March 2017

ஆச்சார்ய கிருபளானி/சுசேதா கிருபளானி

ஆச்சார்ய கிருபளானி

ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி
பிறப்புநவம்பர் 111888
ஐதராபாத்மும்பை மாகாணம்
இறப்புமார்ச்சு 19, 1982 (அகவை 93)
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து
வாழ்க்கைத் துணைசுசேதா கிருபளானி
ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி (11.11.1888 – 19.03.1982) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி. இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர்பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார். [1]
1970களின் நெருக்கடி நிலைக்குப் பின்னர் இவரது அரசியல் பங்களிப்பு குறைந்து போனது.


சுசேதா கிருபளானி

சுசேதா கிருபளானி
சுசேதா கிருபளானி
உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்
பதவியில்
02.10.1963–14.03.1967
முன்னவர்சந்திர பானு குப்தா
பின்வந்தவர்சந்திர பானு குப்தா
தனிநபர் தகவல்
பிறப்பு25 சூன் 1908
அம்பாலாஅரியானா
இறப்பு1 திசம்பர் 1974
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
சுசேதா கிருபளானி (Sucheta Kriplani) (வங்காளসুচেতা কৃপলানীஇந்திसुचेता कृपलानी) இந்தியா உத்தரப்பிரதேச மாநில முதல் பெண் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமை உடையவர்.
ஹரியானாவில் இருந்த வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் சுசேதா. இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவார்.
காந்தியடிகளின் வழியைப் பின்பற்றிய சுசேதா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இந்தியப் பிரிவினைக் கலவரத்தின் போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரையில் சுசேதாவும் கலந்து கொண்டார்.
1947 ஆகஸ்டு 15 அன்று அரசியலமைப்பு அவையின் அமர்வில் வந்தே மாதரம் பாடலை இவர் பாடினார்.

Saturday, 25 March 2017

உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே தன்னிடம் மன்னிப்பு கோரச் செய்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவார்களா? அதுவும் அவன் ஒரு தமிழன்

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டி ருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறு களை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே தன்னிடம் மன்னிப்பு கோரச் செய்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவார்களா? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனைபேர் அறிவார்கள். அந்த வீரன் வேறுயாரு மல்ல அவன்தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனைபேர் அறிந்துள்ளார்கள்? ஒரு வேடிக்கையான விடயம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டுதான் மாவீரன் செண்பகராமனை இனம் கண்டு கொண்டு அவரைக் கெளர வித்து சிலை ஒன்றை நிறுவியது.
இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி. இந்திய சுதந்திரத்திற்காய் போர்க்களமாடிய வீரர்கள் யார் என்று தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்விகேட்டால், உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலைத் தருவார்கள். தமிழர் ஒருவரது பெயரைக்கூட கூறமாட்டார்கள். எண்ணற்ற தமிழ் மறவர்கள் விடுதலைக்காக வீரகாவியமாகியிருக் கின்றனர். வெள்ளையனின் பீரங்கி களுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன் னால் வாளும் வேலும்கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரியும். அடிமையாக வாழ் வதைவிட செத்துமடி வதே மேல் என போராடிய வீரபாண்டிய கட் டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழ் மற வர்களையயல்லாம் தமிழ் வரலாற்றில் காணலாம்.
செண்பகராமன் எத் தகைய வீரன் என் பதைப் பார்ப்போம்.
இந்தியக் குடியர சின் உயிர் மூச்சாகத் திகழும் ஜெய்ஹந்த் என்னும் தாரக மந்தி ரத்தை முதன் முதலில் உச்சரித்தவர் வங்களாச் சிங்கம் சுபாஸ் சந்திர போஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் ஜெய் ஹிந்த் என்பது உண் மையே. ஆனால், அவருக்கு முன்பே ஜெய் ஹிந்த் மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பக ராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச் சரியமாக இருக்கிற தல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.
பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோ­த்தால் குமுறிக் கொந்த ளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாண வர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன் ஒருவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெ டுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறை வாக வாழ்வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படிச் சாத்தியம்? வியந்தார்கள்.
ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜேர்மனியச் சக்கரவர்த்தியாக அப் போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகரா மனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல் லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜேர்மனியில் கிடையா தென்ற நிலைமை உருவாகியது.
தாயகத்தைவிட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜேர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவு களைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந் தக் கமிட்டியின் உதவியோடு, ஜரோப் பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக்கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.
தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய (Pயூநு ணூஹிம்ணூபு) புரோ இந்தியா எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தி யாவை நிர்மாணிக்கப்போகும் புரட்சிக் குரலாகியது.
ஹிட்லர் மன்னிப்புக் கோரல்
ஒருநாள் டாக்டர் செண்பகராம னும், ஹிட்லரும் அவருடைய சகாக்க ளும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத் தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.
“சுதந்திரம் பெறக்கூடிய யோக் கியதை இந்தியாவுக்குக் கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்ட தும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பக ராமன். இந்தியா வின் பாரம்பரியப் பெருமைபற்றியும் இந்தியத்தலைவர்களின் மேதா விலா சம் பற்றியும் ஆணித்தரமான வாதங் களை எடுத்து ஹிட்லர் முன், விளக் கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண் பகராமனின் மனோசக்தி முன் தன்னால் நிற்க முடி யாது அடங்கிய தோடு, தாம் செய்த தவறை உணர்ந்து உடனே செண்பகராம னிடம் மன்னிப்புக் கேட்டார். வார்த்தை யளவில் மன்னிப்புக் கூறினால் போதாது எழுத்திலும் மன்னிப்புத் கோரவேண் டும் என்று வாதாடினார் பிடிவாதக் காரனான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர்.
முதலாம் உலகப்போர் பிரிட்ட னுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு இராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதமாக இந்தியர் களைப் பயன்படுத்த ஜேர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப் பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர் என்பதை-ஒரு சந்தர்ப்பத்தில் ஜேர்மனியர் இலாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்க மல்ல- என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.
இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு இந்திய தேசியத் தொண்டர் படை என்று பெயர் கொடுக்கப்பட்டது.
ஜேர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜேர் மனிக்கு உதவ இந்திய தேசிய தொண் டர்படை எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங் கள் அனைத்தையும் ஜேர்மனின் கெய் ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலே தான், செண்பக ராமனின் மதிநுட் பத்தைப் பாராட்டி சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதி பதியாக வீரன் செண்பக இராமன் நியமிக்கப்பட வேண்டும் என்று கெய்சர்மன்னன் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.
யுத்த காலத்தில் ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் மூழ்கிக் கப்ப லின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டஸார் கதி கலங்கினர். அந்தக் கப்பலைச் செலுத்தி, 1914 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாருமல்ல- ஹம்டன் எனும் பிரமாண்டமான நீழ்மூழ்கி யின் பொறியியலாளரும் இரண்டா வது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை நகர்த்ததற் கும் பிரிட்டிஷார் நடுங் கியதற் கும் காரண பூதர்! ஹம் டன் குண்டு வீச்சு சம்பவத் தைப் பற்றிய வரலாறு, கோட் டைச் சுவற் றில் பதிக்கப் பட்டிருப் பதை இப்போதும் சென்னை யிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந் தது செண் பகராம னின் இரு பத்தி மூன்றா வது வயதில்! இத்தனை இளம் பரு வத்தில் செண்பகராமன் மேற் கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலே யர்கள் வியந்தார்கள். அவர் வழிநடத்திய இந்திய தேசியத் தொண்டர் படை யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையா தென வரலாறு கூறுகிறது.
இத்தனை வீரச் சாகசங்களைப் புரிந்த ஆங்கிலேயர்களை துவம்சம் செய்த மாவீரன், நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் அவரது 44 வது வயதில் கொல்லப்பட்டார். அவர்இறக்கும் தறுவாயில் தன் இறுதி இலட்சியத்தை மனைவியிடம் பின்வருமாறுகூறுயிருந்தார்.
“இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல் என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின் எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று நான் பிறந்த தமிழ்நாட்டில் என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களில் தூவிவிடு அதோடு என் உயிர் பிரிந்தபின்னும் என் போராட் டத்தை தொடர்ந்து நீ நடத்த வேண்டும்” என நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற்கண்ட வேண்டு கோளைவிடுத்த செண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு, மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.
செண்பகராமன் என்ற வீரத் தமிழனின் வீரவரலாறு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ வீரத் தமிழர்களின் வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது.

Wednesday, 22 March 2017

சத்துக் குறைபாடு - நோய் - காரணம்

  • புரத குறைபாட்டால் வரும் நோய் குவஷியோர்கர்,மராஸ்மஸ்
  • வைட்டமின் A – மாலைக்கண் நோய்
  • வைட்டமின் B – பெரி -பெரி
  • வைட்டமின் C - ஸ்கர்வி
  • வைட்டமின் D - ரிக்கட்ஸ்
  • வைட்டமின் E - மலட்டுத்தன்மை
  • வைட்டமின் K – இரத்தம் உறையாமை
  • இரும்பு - இரத்தம் உறையாமை
  • அயோடின் – முங்கழுத்துக் கழலை
  • சளி – ரைனோ வைரஸ்
  • இளம்பிள்ளைவாதம் – போலியோ வைரஸ்
  • சின்னம்மை வாதம்- ஹெர்ப்ஸ்வைரஸ்
  • வெறிநாய்க்கடி – ரேப்டோ வைரஸ்

Tuesday, 21 March 2017

51. 1966 ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார் ?
கால்டுவெல்ஈ.வே.ரா. பெரியார்அறிஞர் அண்ணாதேவநேயப் பாவாணர்
  
52. தொல்காப்பியரின் ஆசிரியர் யார் ?
அதங்கோட்டாசான்திருவள்ளுவர்அகத்தியர்மேற்கண்ட எவருமில்லை
  
53. பூஞ்சைகளால் தோன்றும் எர்காட் என்கிற நோய்பாதிப்பது ?
மனிதன்மனிதன் மற்றும் விலங்குதாவரம்விலங்கு
  
54. ஆகாய விமானசாதனங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகம் ?
இரும்புகுரோமியம்டியூராலுமின்டின்
  
55. "அக்ரோ மெகாலி" எனும் நோய் எந்த சுரப்பியின் குறைபாடால் ஏற்படுகிறது ?
தைராய்டுஅட்ரினல்கணையம்பிட்யூட்டரி
  
56. ஒவ்வொரு செல்லும் _______ஜோடி குரோமோசோம்களைக் கொண்டுள்ளன ?
43 ஜோடி26ஜோடி22 ஜோடி23ஜோடி
  
57. ஆணில் காணப்படும் பால் குரோமோசோம் ?
xxyyxx
  
58. மருந்தைக் குறிக்கும் Drug என்றவார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
ஜெர்மனிஆங்கிலம்பிரஞ்சுரஷிய மொழி
  
59. வைட்டமின் C குறைவால் ஏற்படும்நோய் ?
ரிக்கெட்ஸ்குவாசியோகர்மராஸ்மஸ்ஸ்கர்வி
  
60. குளுக்கான் என்கிறஹார்மோனை சுரக்கும் சுரப்பி ?
பிட்யூட்டரிஅட்ரினல்கணையம்தைராய்டு

61. ஆண் குழந்தையை நிர்ணயம் செய்யும் ஆணின் குரோமோசோம் ?
xyyxxy
  
62. நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூள் - மஞ்சள் செடியின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது ?
வேர்இலைதண்டுஅனைத்து பகுதிகளிலிருந்தும்
  
63. காகிதம் தயாரிக்க உதவும் மரம் ?
பைன்கருவேலம்மாமரம்யூக்காலிப்டஸ்
  
64. தலைமைச் சுரப்பி எது ?
பிட்யூட்டரிதைராய்டுகணையம்அட்ரினல்
  
65. பின்வருபவனவற்றை அவற்றிலுள்ள நீரின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அடுக்குக ? - காளான், வெள்ளரிக்காய், முட்டை,பால்
வெள்ளரி , முட்டை,பால்,காளான்வெள்ளரி,காளான்,பால், முட்டைபால், வெள்ளரி, காளான்,முட்டைபால், முட்டை, வெள்ளரி, காளான்
  
66. சாப்பிடும் முன் அதை நுண்ணோக்கியில் பார்த்து விட்டுசாப்பிடும் பழக்கமுடைய அறிவியலறிஞர்யார்?
இராபர்ட் ஹீக்ஜான் வெஸ்லிஇராபர்ட் பிரெளவுன்ஆர்க்கிமிடிஸ்
  
67. மராஸ்மஸ் நோய்ஏற்படுவது ?
கொழுப்பு சத்து குறைவால்வைட்டமின் குறைவால்புரதச் சத்து குறைவால்கார்போஹைட்ரேட் குறைவால்
  
68. உயிரியின் அடிப்படை அலகான செல்லை - கண்டு பிடித்தவர் யார் ?
இராபர்ட் பிரெளன்இராபர்ட் ஜீக்இராபர்ட்ஹீக்இராபர்ட் கிளைவ்
  
69. செல்லின் தற்கொலை பைகள் என அழைக்கப்படுபவை ?
மைட்ரோகாண்ட்ரியாசெண்ட்ரோசோம்கள்ரைபோசோம்கள்லைசோசோம்கள்
  
70. மனிதனின் உடலில்காணப்படும் நீளமான எலும்பான தொடை எலும்பின்நீளம் எவ்வளவு ?
25 செமீ35 செமீ45 செமீ55 செமீ

குப்தர்  காலத்து  வரலாற்றுச் சான்றுகள் குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன. 1. இலக்கியச் சான்று...