Saturday, 18 March 2017

பூனா ஒப்பந்தம் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24

பூனா ஒப்பந்தம் என்பது 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24 அன்று பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அம்பேத்கருக்கும் காந்தி அடிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை ஆகும்.

வரலாறு[தொகு]

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தேர்தலில் தனித் தொகுதிகளை அளிக்க பிரிட்டிசு அரசு முன் வந்தபோது இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் அந்தத் திட்டத்தை ஆதரித்தார். ஆனால் காந்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள் தீண்டத் தகாதவர்கள் என்றும் சாதி இந்துக்கள் என்றும் பிளவு படுவதைத் தாம் விரும்பவில்லை என்று கூறினார். எரவாடா சிறையில் இருந்த காந்தி அடிகள் 18-9-1932 இல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். காந்தியடிகள் உடல் நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்திக் காந்தியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அம்பேத்கரும் பிற இந்து தலைவர்களும் பூனாவில் கூடிப் பேசினர். இந்தியாவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய காந்தி அடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு புறம்; தீண்டப் படாத சமூகத்தின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம். எனவே இருதலைக் கொள்ளி நிலைமைக்கு அம்பேத்கர் ஆளானார்.
பூனா ஒப்பந்தத்தின் படி மாகாணச் சட்டசவைகளில் 148 இடங்களைத் தீண்டத் தகாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிப்பது என்று முடிவு ஆனது. பிரிட்டிசு இந்தியாவில் மத்தியச் சட்ட சவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் பத்து விழுக்காட்டைத் தீண்டத் தகாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக அம்பேத்கரும், சாதி இந்துக்களின் சார்பாகப் பண்டித மதன் மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டார்கள். இராசகோபாலாச்சாரி இராசேந்திரப் பிரசாது, எம்.சி.இராஜா போன்ற தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதனைத் தொடர்ந்து காந்தி உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிட்டார்.

No comments:

Post a Comment

I spent a week with Motorola’s Edge 70, an absolutely thin smartphone that is too hard to ignore

  The Motorola Edge 70 focuses on sleek design and comfort while still delivering all-day battery life. Priced at Rs 29,999, it offers a pre...