குப்தர் காலத்து வரலாற்றுச் சான்றுகள்
குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று
வகையான சான்றுகள் உள்ளன.
1. இலக்கியச் சான்றுகள்
நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள்
அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின்
நீதிசாரம் என்ற தரும சாத்திரம் (.. 400)
விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம் ஆகியவை
குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.
புத்த, சமண இலக்கியங்கள்
காளிதாசர் படைப்புகள்
இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த
சீனப் பயணி பாஹியான் குறிப்புகள்
2. கல்வெட்டுச் சான்றுகள்
மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின்
சாதனைகளை குறிக்கிறது.
அலகாபாத் தூண் கல்வெட்டு: சமுத்திரகுப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை,
சாதனைகள்
ஆகியவற்றை இது விளக்குகிறது. மெஹ்ரோலி இதனைப் பொறித்தவர் இரும்புத் தூண்
ஹரிசேனர். இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.